Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… மரியாதை உயரும்…ஆரோக்கியம் சீராகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும். மதிப்பு, மரியாதையும் கூடும். மனைவி மக்களின் உடல் ஆரோக்கியம் ஏற்படும். பெண்களின் உதவிகளை இன்று நீங்கள் பெறுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை கொஞ்சம் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவது நன்மையை கொடுக்கும். வியாபார தொடர்பான பயணங்கள் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம் உழைப்பு இன்று கூடும்.

இன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். பழைய சொத்துக்களை விற்க கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சக மாணவரின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே கிடைக்கப்பெறும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்-: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

Categories

Tech |