இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது. அதன் பிறகு நிறைய கார்ட்டூன் சேனல்களும் கூட குழந்தைகளுக்காக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனலை காண்பித்து விட்டு தான் வீட்டில் உள்ள வேலைகளை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கார்ட்டூன் சேனல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக சரியாக அக்டோபர் மாதத்தில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் தொடங்கப்பட்டது. இந்த சேனலில் ஸ்கூபி டூ, பவர் பஃப் கேர்ள்ஸ், டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பாய் போன்ற பல்வேறு விதமான கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
இந்த சேனல் 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் என்று கூட என்று கூட சொல்லலாம். இந்நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை தற்போது நிறுத்த உள்ளதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணைய இருக்கிறதாம். இதனால்தான் கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை நிறுத்தப் போவதாக கூறியுள்ளனர். மேலும் சன் தொலைக்காட்சியின் சுட்டி டிவியையும் நிறுத்தப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஒரே நேரத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான 2 சேனல்களை நிறுத்தப் போவதாக தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.