நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் எட்டு காட்டெருமைகள் முகாமிட்டது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று குட்டிக்கு பால் கொடுத்தவாறு நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து காட்டெருமைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகே கோபத்துடன் தாக்குவதற்காக சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
பின்னர் பொதுமக்கள் ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் நின்ற வாகனங்களை ஒதுக்கிய பிறகு காட்டெருமைகள் அந்த வழியாக தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.