Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அபாயகரமான ராட்சத மரங்கள்” அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!!

அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சிறுமலர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊட்டி வடக்கு வனச்சரவு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறுமலர் குடியிருப்பு பகுதியில் ராட்சத கற்பூர மரங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும் நாட்களில் மரங்கள் குடியிருப்புக்கு மேல் விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மரம் விழுந்து குடியிருப்பு சேதம் அடைந்தது. எனவே அபாயகரமான மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |