பும்ரா விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது, அவரோட வாழ்க்கை முக்கியம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இன்று முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.. இன்று டி20 தகுதிச் சுற்று போட்டியின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது மற்றும் அவர்கள் மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி 1ல் வென்றனர். சூப்பர் 12 சுற்றில் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்வதற்கு முன், அணி அதிகாரப்பூர்வ பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (அக்.,17) மற்றும் நியூசிலாந்தை (அக்.,19) எதிர்கொள்ளும்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடங்குவதற்கு முன்னதாக, அக்டோபர் 15, (நேற்று) சனிக்கிழமையன்று அனைத்து 16 கேப்டன்களும் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினர், மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது அணி குறித்து பேசினார். அப்போது பும்ராவின் காயம் குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்டபோது, பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தால் போட்டியிலிருந்து வெளியேறினார், இதனால் பந்துவீச்சு துறையில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. கடந்த ஒரு வருடத்தில் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் கூட, பந்துவீச்சு அணியின் பலவீனமான இணைப்பாகவே உள்ளது “அவர் ஒரு தரமான பந்துவீச்சாளர், துரதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏற்படலாம்.
இதைப் பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க முடியாது, அவரது காயம் குறித்து நாங்கள் நிறைய நிபுணர்களிடம் பேசினோம், ஆனால் அவர்களிடமிருந்து நல்ல பதில் வரவில்லை. உலகக் கோப்பை முக்கியமானது, ஆனால் அதைவிட அவரது வாழ்க்கை எங்களுக்கு முக்கியமானது. அவருக்கு 27-28 வயதுதான், அவருக்கு முன்னால் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. அப்படி ரிஸ்க் பண்ண முடியாதுன்னு ஸ்பெஷலிஸ்ட்களும் சொன்னாங்க. உலகக்கோப்பையில் நாங்கள் அவரை இழக்கிறோம், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்..