தேவையான பொருட்கள்
- ரவை – 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- தண்ணீர் – 2 1/2 கப்
- ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்
- கேசரி கலர் கொடி – சிறிதளவு
- நெய் – 6 டேபிள்ஸ்பூன்
- முந்திரி – 12
- கிஸ்மிஸ் பழம் – 12
செய்முறை
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை தனியாக எடுத்து விட்டு அதே கடாயில் ரவையை போட்டு நன்றாக வறுக்கவும்.
ரவையின் நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்.
கொதித்த தண்ணீரில் வறுத்து வைத்துள்ள ரவையை மெதுவாக கிளறிக்கொண்டே போடுவதால் கட்டி பிடிப்பதை தவிர்க்கலாம்.
ரவை தண்ணீரை உறிஞ்சும் பொழுதும் நன்றாக கிளறிவிடவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
சர்க்கரை கரைந்து ரவை வெந்து வருகையில் ஏலக்காய் பொடி கேசரிப் பொடியை போட்டு மேலும் நன்றாக கிளறி விடவும்.
தண்ணீர் அனைத்தும் வற்றி நன்றாக வெந்த பின்னர் 3 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி மூன்று நிமிடங்கள் நன்றாக கிளறி வேகவிடவும்.
மேலே வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை போட்டு மேலும் ஒரு முறை கிளறி விட்டு கிண்ணத்தில் வைத்து பரிமாறலாம்