ஆசிரியை மாணவியின் ஆடையை கழற்றியதற்காக அந்த மாணவி தீக்குளித்த சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது. ப
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல சம்பவத்தன்று பள்ளிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது மாணவி தன்னுடைய சீருடையில் பிட்டுகளை மறைத்து வைத்திருந்ததாக ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாணவியை வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்ற செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பி சிறிது நேரத்திலேயே மாணவி அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த சிறுமி தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி அளித்த வாக்குமூலத்தில் பெண் கண்காணிப்பாளர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும், சீருடையில் பிட்டு மறைத்து வைத்திருந்தேனா என்பதை கண்டறிய அருகில் உள்ள ஒரு அறையில் ஆடைகளை களற்ற செய்தார்கள். என்னுடைய எதிர்ப்பையும் மீறி செய்தார்கள் என்றார் என்று கூறியுள்ளார்.