பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகியவை தற்போது மகாசங்கமம் என்கிற பெயரில் ஒன்றாக இணைந்து ரகளை செய்வது தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
புதியதாக திருமணம் செய்திருக்கும் ராதிகா மற்றும் கோபி இருவரும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்ற நிலையில் அங்கு பாக்யாவின் குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டையும் பார்த்து அவர்கள் ஷாக் ஆகின்றனர். இன்றைய எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கோபி அறைக்குள் புகுந்து “இது எங்கள் ரூம்” என சொல்லி ரகளை செய்கின்றனர். அவர்களை வெளியில் துரத்துவதற்குள் ராதிகா அதிகம் டென்ஷன்ஆகிறார். அதன் பின்னர் எல்லோரும் campfire முன்பு அமர்ந்து ஆடி பாடி என்ஜாய் செய்து கொண்டிருக்கும்போது ராதிகா கோபியை கூட்டிக்கொண்டு அங்கே வந்து அமர்கின்றார்.
அப்போது பாக்யா பாடிய பாட்டை கேட்டு கோபி கைதட்ட ராதிகா டென்ஷன் ஆகின்றார். இன்றைய எபிசோடின் இறுதியில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவை ராதிகா பார்க்கில் சந்தித்து பேசுகின்றார். அதாவது அவர் பேசியதாவது, “எங்க நிம்மதியை ஏன் கெடுக்குறீங்க, இதுக்கு நீங்க விவாகரத்து கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்” என சண்டைபோடுகிறார். இனி அடுத்து வரும் எபிசோடிலிருந்து ராதிகாவை முழு வில்லியாக பார்க்கலாம்.