Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட அனுமதி கிடையாது.

தமிழகத்தில் 10 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து பொது தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பொது தேர்வுக்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள் புதிதாக தேர்வு மையம் கோரும் பள்ளிகள் என அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளாக இருக்க வேண்டும்.அந்த அறிவுரைகள் அனைத்தையும் பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |