Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிக்பாஸ் பின்னணி குரல் கொடுப்பவருக்கு இவ்வளவு சம்பளமா…..? வியப்பில் ரசிகர்கள்….!!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி “பிக் பாஸ்”.

இந்நிகழ்ச்சியின் புதிய சீசனான “பிக்பாஸ் சீசன் 6” சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளார்களை விட ஜி.பி. முத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களிடையே பிக்பாஸ் பின்னணியில் ஒளிக்கும் குரலுக்கு பெரிய ரசிகர்கள் உண்டு. அப்படி பிக்பாஸுக்கு அரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வருபவர் சாஷோ என்ற சதீஷ் சாரதி சச்சிதானந்தம். கடந்த ஐந்தாவது சீசனில் மாதம் ஒன்றுக்கு ஜந்து லட்சம் சம்பளமாக தரப்பட்ட நிலையில் இந்த சீசனில் ஒரு லட்சம் உயர்த்தி ஆறு லட்சம் ரூபாய் தரப்படுகிறதாம். அதாவது ஒரு நாளைக்கு இருபதாயிரம் ரூபாய் தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமலின் சம்பளமும் இந்த சீசனில் உயர்த்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |