Categories
மாநில செய்திகள்

“இப்ப யாரு ஆட்சின்னு தெரிஞ்சுக்கோங்க” ஓட ஓட விரட்டி அடிப்போம்….. பாஜகவுக்கு பகிரங்கமாக வார்னிங் விடுத்த உதயநிதி….!!!!!

இந்தியாவில் மத்திய அரசானது ஹிந்தி மொழியை திணிப்பதற்கு முயற்சி செய்வதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசால் நடத்தப்படும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை பின்பற்ற வேண்டும் எனவும், ஆங்கிலத்தை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வுகளிலும் ஆங்கில மொழியை நீக்கிவிட்டு ஹிந்தி மொழியை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என புதிய அரசாணை பிறப்பிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. இது மாநில அரசுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிந்தி மொழி திணிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதன்பிறகு கடந்த காலங்களில் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டங் களையும் தன்னுடைய twitter பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருந்தார். கடந்த 1965 ஆம் ஆண்டு நடைபெற்றது போன்று தற்போதும் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி மொழி எதிர்ப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுப்பது போன்று பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிரதமர் அவர்களே தற்போது அதிமுக ஆட்சி நடைபெறவில்லை.

பன்னீர் செல்வமோ, எடப்பாடியோ முதல்வராக இல்லை. தமிழகத்தில் தற்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே இனியும் இந்தி திணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் டெல்லிக்கு வந்து பிரதமர் அலுவலகம் முன்பாக போராடுவோம். கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலைப் போன்று வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் இருந்து பாஜகவை ஓரம் கட்டி விரட்டி அடிப்போம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுப்பது போன்று பேசியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் திமுகவில் இருக்கும் முன்னணி தலைவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

Categories

Tech |