Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் யார் கூட நடிக்க ஆசை…? அந்த 2 நடிகையை சொன்ன ஜிபி முத்து….. கமல் வேலைக்கே வேட்டு….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ஜி.பி. முத்துவிற்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை வீட்டிற்கு கமல் அனுப்பிவைத்தார். உங்களுக்கு எந்த இரண்டு நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது? என்று கேள்வி கேட்டு அந்த போஸ்ட் பாக்சில் லேட்டர் ஒன்று இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் ஜி.பி. முத்து, நயன்தாரா, சிம்ரன் என்று கூற என்னுடைய வேலைக்கே வேட்டு வைக்க பார்க்குறீர்களே என்று கமல் கூறுகிறார்.
அதே போல் வீட்டிற்குள் இருக்கும் இருவரை ஹீரோயினாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கமல் கேட்க, ஜி.பி. முத்து மௌனமாக இருக்கிறார்.

Categories

Tech |