தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதி கெட்டப்பில் நடித்திருப்பவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சில வருடங்களுக்கு முன்பாக போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் ஒரு திறமையான நடிகர் என்றாலும் அவ்வப்போது பொது வெளிகளில் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கிக் கொள்வார். இவர் சமீபத்தில் கூட பீஸ்ட் திரைப்படத்தில் திறமையான என்னுடைய நடிப்பை வீணடித்து விட்டார்கள் என்றும், மிகப்பெரிய ஹீரோவான தளபதி விஜய் போன்றவர்கள் இந்த காட்சியை எப்படி கவனிக்காமல் நடித்தனர் என்றும் கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
இதற்கு விஜய்யின் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தான் பேசியது தவறு என்று கூறி இணையதளத்தில் மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ஷைன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது இவர் மலையாள சினிமாவில் நடித்துள்ள விசித்திரம் திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருப்பதால் படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ஷைன் டாம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திரையுலகில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் யாருமே பேசுவது கிடையாது என்றார்.
அப்போது குறிப்பிட்ட ஒரு பத்திரிக்கையாளர் திரையுலகில் அதிக அளவில் பெண் இயக்குனர்கள் வந்தால் இப்படி ஒரு பிரச்சனை வராதல்லவா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகர் ஷைன், பெண்கள் அதிக அளவில் வந்தால் பிரச்சனைகளும் நிறைய வரும். எங்கயாவது பெண்கள் ஒன்றாக கூடினால் பிரச்சனை வந்துவிடும். உதாரணமாக மாமியார் மற்றும் மருமகள் ஒன்றாக கூடும் இடத்தில் சண்டையை பார்க்காமல் இருந்துள்ளீர்களா என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையுலகத் துறையிலும் நடிகர் ஷைன் ஷாம் டாக்கோவின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.