அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் பால ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஆஞ்சநேயரை பல்வேறு பழங்களால் அலங்கரித்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனையும், மாலையில் மங்கல இசையுடன் வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Categories