தமிழகத்தில் 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களுக்கு சுற்றி அறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து பின்வரும் அறிவுத்தல்களை பின்பற்றி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்துக்களை பெற்று ஆய்வு செய்து தங்கள் ஒப்புதலுடன் அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். எவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களில் தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்யப்படும்.
அதன் பிறகு அவசியம் தேர்வு முறையாக அமைத்து ஆக வேண்டும் என கருதினால் அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு திட்டவட்டமான குறிப்புரையுடன் கருத்துருவாக அனுப்ப வேண்டும். அதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களது வரையறைக்கு உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோரும் கருத்துக்களை அனுப்பி வைக்க கோரி பள்ளிகளுக்கு சுற்றி அறிக்கையை அனுப்ப வேண்டும். இதனையடுத்து 10 கிலோமீட்டர் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயில அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்படும். பொது தேர்வுக்கு ஏற்கனவே தேர்வு மையம் செயல்பட்டு வரும் பள்ளிகள் புதிதாக தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த அறிவுரைகள் அனைத்தையும் பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்கத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.