Categories
தேசிய செய்திகள்

“பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கும் திட்டம்” விரைவில் நாடு முழுதும் அறிமுகம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான முக்கிய சேவைகளிலும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்த்து ஆதார் அட்டையையும் வழங்குவதற்கான நடைமுறைகளை யூஐடிஏஐ செயல்படுத்தி வருகிறது.

இந்த நடைமுறை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 16 மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. அதன் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை வழங்குவதற்கான நடைமுறைகளை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்து வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும்போது, பெற்றோர் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்ட தகவல்கள் குழந்தைகளின் ஆதார் அட்டையில் சேர்க்கப்படும்.

எனவே குழந்தைகளுக்கு 5 வயது பூர்த்தி அடைந்த பிறகு ஆதார் அட்டையில் கைரேகை, கருவிழி ஸ்கேன், முக புகைப்படம் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். அதன்பிறகு அந்த குழந்தைக்கு 15 வயது பூர்த்தியடைய பிறகு ஆதார் அட்டையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். மேலும் ஒரு குழந்தை பிறந்த பிறகு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் போது அந்த விவரங்கள் அனைத்தும் யூஐடிஏஐ கவனத்திற்கு செல்லும் விதமாக அனைத்து நடைமுறைகளையும் கணினி மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால், பிறப்புச் சான்றிதழுடன் சேர்த்து ஆதார் அட்டையும் வழங்கப்பட்டு விடும்.

Categories

Tech |