Categories
மாநில செய்திகள்

யார் வந்தாலும் மிளகாய் பொடி சாபம்தான் பாத்துக்க…. சாபமிட்ட சாமியாரால் சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னையில் தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலை அவற்றை எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஒன்று கூடினர் . இருந்தாலும் கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் .அதனால் ஆத்திரமடைந்த பெண் சாமியார் ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார்.

அப்போது உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோபத்தோடு சாபம் விட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து தெறித்து ஓடினர். அதன் பிறகு அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு கால அவகாசம் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

Categories

Tech |