Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து….. பணம் மோசடி செய்யும் மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!

கோவையைச் சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் உங்களது தொழில் சம்பந்தமான பொருட்கள் எங்களிடம் உள்ளது. அதனை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அப்போது பொருட்களை நேரில் வந்து பார்த்துவிட்டு சொல்வதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து வாலிபரின் செல்போனுக்கு வீடியோ கால் வந்தது.

அதனை எடுத்து பார்த்த போது இளம்பெண் ஒருவர் திரையில் ஆபாசமாக நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபர் இணைப்பை துண்டித்தார். இதனை அடுத்து வாலிபரின் whatsapp எண்ணுக்கு வந்த மெசேஜை திறந்து பார்த்தபோது அவர் அரை நிர்வாணமாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வந்தது. இதனை அடுத்து வாலிபரை தொடர்பு கொண்ட மர்ம நபர் அரை நிர்வாண புகைப்படத்தை யாருக்கும் அனுப்பாமல் இருக்க 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

அதற்கு வாலிபர் மறுப்பு தெரிவித்து இணைப்பை துண்டித்தார். இதற்கிடையில் மர்ம நபர் வாலிபரின் நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஏமாற்றி இதே போல் பத்தாயிரம் ரூபாய் பறித்துள்ளார். இதுகுறித்து வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |