Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். இதையடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரித்தால் அது தொடரட்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

Categories

Tech |