Categories
அரசியல்

சமூக வலைத்தளங்களில் திராவிட மாடல் குறித்த கேள்வி… முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்.!!!!!

திராவிடவியல் கோட்பாடுகள் திராவிட மாடல் நிர்வாகம் போன்றவற்றை பற்றி சமூக வலைதளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழுகின்ற நியாயமான கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் ஆன்சர் தொடரில் பதிலளிக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி.

கேள்வி: திமுக பாஜக வோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கின்றார்களே.?

பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது.

கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா அல்லது முடியாதா.?

பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனால் தாமதமாவதால் நடக்காது என நினைக்காதீர்கள். ஏனென்றால் நீட் தேர்வில் மிகப்பெரிய சமூக அநீதியை பாஜக அரசு செய்து வருகிறது வரும் நாடாளுமன்ற தேர்தல் அதற்கு பாடம் புகட்டுவதாக அமையும்.

கேள்வி: சாலைகளை எப்போதுதான் சரி செய்வீர்கள்? மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முடியும்.?

பதில்: கடந்த பத்து வருட கால திமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையை மீள் உருவாக்கம் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடக்கின்ற காரணத்தினால் சிரமங்கள் ஏற்படுகிறது ஆனால் மழைக்கு முன்பாக வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்.

கேள்வி: ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனை என்ன? சவால் என்ன?

பதில்: மக்கள் முகங்களில் காணக்கூடிய புன்னகை தான் எனது சாதனை நிதி நெருக்கடி தான் மிகப்பெரிய சவால்.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தல்- திமுக பங்களிப்பு என்ன?
2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பங்களிப்பு என்னவாக இருக்கும்.?

பதில்: 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு.
சமூக நீதியில் கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமையும் என்பது நமது இலக்காகவும் இதற்காக நடவடிக்கைகளை திமுக எடுக்கும்.

கேள்வி: இரண்டாவது குறையாக திமுக தலைவராக தேர்வாகியுள்ளீர்கள் கட்சியை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் இருக்கிறதா.?

பதில்: இனி தமிழ்நாட்டை திமுக தான் ஆளும் என்கிற நிலை இருக்க வேண்டும் என்னிலிருந்து கடை கோடி தொண்டன் வரை இந்த லட்சியத்திற்காக உழைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது

Categories

Tech |