Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், வேலூர், தென்காசி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் பெரும்பாலான நகரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |