அரசு பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் sc,St, OBC ஆகிய மாணவர்களுக்கு 6 உதவித்தொகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் படிக்கும் SC ,ST,OBC ஆகிய மாணவர்களுக்கு 6 வகையான உதவி தொகைகள் வழங்கப்படுகிறது.
அதில் முக்யமந்திரி வித்யார்த்தி பிரதிபா யோஜனா என்ற மாநில நிதியுதவி திட்டம், OBC,EBC,DNT ஆகிய மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவி தொகை திட்டம், OBC,EBC க்காண மெட்ரிக், OBC, EBCக்கான மெட்ரிக் ஸ்காலர்ஷிப்ஆகியவை அடங்கும். இதனையடுத்து இ-டிஸ்ட்ரிக்ட் போர்ட்டலில் 2022 -2023 கல்வியாண்டில் மேற்கூறிய உதவி தொகை திட்டத்தின் கீழ் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியான மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.