போலியான பான் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மக்களுக்கு பல வகைகளில் பான் கார்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். இதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்கள் தினம் தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்த வருகின்றனர். ஆன்லைன் முறையில் மோசடி செய்ய தினமும் புதுப்புது யுக்திகளை கண்டுபிடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை பெற பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் முதலாவதாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகாரி போல தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பெறுகின்றனர். இதன் மூலம் அவர்களின் சேமிப்பு பணம் முழுவதும் சூறையாடப்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்திய வருமான வரித்துறை போலியான பான் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து பான் அட்டைகளுக்கும் QR குறியீடு அச்சிடப்பட்டுள்ளது. அதன் மூலம் போலி பான் கார்டுகளை கண்டறிய முடியும். இதற்கான வழிமுறைகளையும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதில் முதலில் Enhanced PAN QR code reader எந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இச்செயலியானது NSDL e governance infrastructure limited என்பவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் கேமரா, குறுஞ்செய்தி ஆகியவற்றை அணுகுவதற்கான அனுமதியை கேட்கும். அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். இதனையடுத்து பின்பக்க கேமரா உதவியுடன் பான் அட்டையில் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து தனிப்பட்ட விவரங்களை பெற முடியும். பின்னர் உங்களின் தகவல்கள் காண்பிக்கப்படும். ஆனால் அந்த பான் கார்டு போலியானது என்றால் தகவல்கள் எதுவும் காட்டாது என கூறியுள்ளனர்.