ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியின் கட்சி அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகும். ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சவுகந்த் அலி நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது இந்து மதத்தினர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மூன்று பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கின்றனர் என்று சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய போது நாங்கள் மூன்று திருமணம் செய்கின்றோம் என மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாங்கள் இரண்டு திருமணம் செய்து கொண்டாலும் நாங்கள் இரண்டு மனைவிகளுக்கும் சமுதாயத்தில் மதிப்பளிக்கின்றோம்.
ஆனால் நீங்கள் (இந்து மதத்தினர்) ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மூன்று பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கின்றீர்கள் நீங்கள் உங்கள் மனைவியையும் மதிக்கவில்லை கள்ள உறவு வைத்துள்ள பெண்களையும் மதிக்கவில்லை. ஆனால் நாங்கள் இரண்டு திருமணம் செய்தாலும் நாங்கள் அவர்களை மரியாதை நடத்துகின்றோம். மேலும் எங்கள் குழந்தையின் பெயர்களையும் ரேஷன் கார்டில் சேர்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மதரீதியில் சர்ச்சைக்குரிய விதமாக பேசிய சவுகத் அலி மீது போலீஸர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.