Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக வீடு கட்டும் வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கம்பி வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டுமான கம்பிகளை வெட்டும் இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் நாராயணன் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நாராயணனை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |