கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் ஜெயராம்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயராம் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஜெயராம் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்துள்ளார்.
இதனை அடுத்து ஜெயராம் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ஜெயராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.