Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தில் கண்டுகொள்ளாத தொண்டர்கள்…. ஆத்திரத்தில் மைக்கை எறிந்த மந்திரி…. நடந்தது என்ன….?

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையான பாஜக ஆட்சியில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இந்நிலையில் மாவ் நகரில் நடந்த காட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியுள்ளார். ஆனால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அதனை கவனிக்காமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் இருந்துள்ளனர். அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இதனை பார்த்த நிஷாத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நீங்கள் என்னை விட பெரிய அரசியல்வாதியா? அப்படி என்றால் நீங்கள் பேசுங்கள், இல்லையென்றால் என்னுடைய பேச்சை கவனிங்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகும் கோபத்தில் அவர் மேடையிலே மைக்கி வீசி எரிந்துள்ளார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மந்திரி பேசுவதற்கு ஏற்ப தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைதியாகினர்.

இதனையடுத்து மைக்கை எடுத்து பேசிய மந்திரி நிஷாத் தொண்டர்களை கடுமையாக சாடினார். நீங்கள் எல்லாம் சமூகத்தில் உயர்நிலை அடைந்த அரசியல்வாதிகளா? யாரோ சிலரின் அடியை பின்பற்றி நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அழிக்கப்பட்டு விடுவீர்கள் என எச்சரிக்கும் வகையில் கூறினார். அதன் பிறகு கட்சியின் ஒரு குறிப்பிட்ட தொண்டர்களை நோக்கி அவர் உங்களுக்கு என்னதான் வேண்டும். உங்களது வீழ்ச்சியா? என்று கேட்டுள்ளார். மேடையில் நான் பேசுகிறேன், கேட்க வேண்டும் என விரும்பினால் கேளுங்கள். அதனை விடுத்து ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்‌. நீங்கள் பின்னர் விவாதம் நடத்திக் கொள்ளலாம். முதலில் புரிந்து கொள்ள முயற்சிகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளம் பாதித்த இந்த மாவட்டத்தில் தவறுதலாக கூட்டத்திற்கான இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. இது பற்றி ஊடகர்கார்கள் மற்றும் நிபுணர்களிடம் கூட நான் விவரித்து இருக்கிறேன் என்று பேசி உள்ளார்.

Categories

Tech |