Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கழுகுமலையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி”…. மீண்டும் படிப்பை தொடர்ந்த மாணவன்…!!!!!!

கழுகு மழையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எடுத்து பள்ளிக்கு அனுப்பும் கள ஆய்வு பணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டார்கள். இது கழுகுமலை மட்டுமல்லாமல் வானரமுட்டி, குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமபுரங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

 

அப்போது சில இடங்களில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கழுவுக்குமலையில் விகாஸ் என்ற மாணவனை மீண்டும் படிப்பை தொடர வைக்கும் நடவடிக்கையில் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு அவருக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இப்பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், கயத்தாறு வட்ட கல்வி அலுவலர் விஜயராஜ் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

 

Categories

Tech |