நைஜீரிய நாட்டில் கடல் பசுவை கயிறு கட்டி தர தரவென இழுத்துச் சென்று துன்புறுத்திய வீடியோ வெளியானதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரிய நாட்டின் கடல் பகுதியில் கடல் பசுக்கள் எனப்படும் உயிரினம் அரிதாகக் காணப்படுகிறது. இந்த அரிதான கடல் பசு உயிரினத்தை பிடிக்கவும் கூடாது, வேட்டையாடவும் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறினால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில இளைஞர்கள் இது போன்ற கொடூரமான செயலை செய்து மாட்டி கொண்டுள்ளனர். ஆம், பாவம் ஒரு கடல் பசுவைப் பிடித்து 7 பேர் சேர்ந்து அதன் வாலைக் கயிரால் கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர். இதை பார்க்கும் போது பாவமாக இருக்கின்றது. ஆனால் அங்கிருந்த சிறுவர்கள் இதனை வீடியோ எடுத்தனர்.
நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்படும் போது அந்த விலங்கு வலிதாங்கமுடியாமல் துடித்தது. ஆனாலும் அந்த கும்பல் (இளைஞர்கள்) விடாமல் இழுத்துக்கொண்டே சென்றனர். கடல் பசுவை துன்புறுத்திய வீடியோ வெளியாகி வைரலானது. இதை பார்த்த இயற்கை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து வீடியோவின் அடிப்படையில் கடல்பசுவை இழுத்துச் சென்ற 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதோ அந்த வீடியோ
https://twitter.com/AleZ2016/status/1231742155686862850