பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சங்கபரிவார் பேசுகின்ற அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்று அர்த்தம், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்த மண்ணில் மதவெறியின் மூலம் மக்களை மோத விடுகின்ற ஒரு நாசக்கார அரசியல்.
காந்தியை கொன்ற கும்பல், காமராஜரை கொல்ல முயன்ற கும்பல், பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய கும்பல், ஒரே நாளில் இரவில் ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்த குஜராத் இனப்படுகொலை செய்த கும்பல், இந்தியாவில் நடந்திருக்கின்ற குண்டுவெடிப்புகளில் இதுவரையில் 18 குண்டுவெடிப்புகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட கும்பல்.
ஒரு அரசியல் கட்சிக்கு பல பிரிவுகள் இருக்கும், ஆனால் அதிலே உல்ட்டாவாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ்க்கு பல அணிகள் உண்டு. அதிலே ஒரு அணிதான் பிஜேபி. பிஜேபியின் அணி அல்ல ஆர்எஸ்எஸ், ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் அணிதான் பிஜேபி. சனாதன எதிர்ப்பை ஒட்டுமொத்த இந்துக்களின் எதிர்ப்பு என்று திரித்து பேசுகிறார்கள் திமுகவிற்கு…
திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக… அதை பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்து கலைஞரைப் போல தெளிவாக புரிந்து, தொலைநோக்கு பார்வையோடு, ஜனநாயக சக்திகளோடு, இணைந்து செயல்படக்கூடிய பேராற்றல் வாய்ந்த தலைமை தான் அண்ணன் தளபதியின் தலைமை.
கலைஞர் இறந்தபோதும் என்ன நினைத்தது சனாதன கும்பல் என்றால் ? அவ்வளவுதான் அண்ணன் தம்பி சண்டையிலே கட்சி காணாமல் போய்விடும், அவ்வளவுதான் கலைஞரை போல பெரிய வல்லமை மிக்கவராக தெரியவில்லை, இப்படி எல்லாம் கணக்கு போட்டார்கள் அவர்கள்..
போடுகின்ற கணக்கு தப்பு கணக்கு என்பதை அமைதியாக இருந்து சாதித்து காட்டியவர் தளபதி அவர்கள். இந்த அரசு கலைஞரின் அரசு, கலைஞரின் அரசு என்றால் அண்ணாவின் அரசு. அண்ணாவின் அரசு என்றால் பெரியாரின் அரசு. பெரியாரின் அரசு என்றால் சமூகநீதி அரசு என்பதை இன்று உலகிற்கு உணர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி அவர்கள் என தெரிவித்தார்.