Categories
சினிமா மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு சின்ன பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக தேமுதிக இருக்கு – பிரேமலதா விஜயகாந்த்

இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியம் அதை ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டால் குடியுரிமை சட்டத்தை நிச்சயமாக வரவேற்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், இங்கு வாழும் முஸ்லீம் மக்களுக்கு ஒரு சின்ன பிரச்சனை வந்தால் நிச்சயமாக தேமுதிக முதல் கட்சியாக களமிறங்கும். முதல்வர் , பிரதமர் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இங்கே வாழும் ஒருத்தருக்கு கூட இதனால் எந்த பாதிப்பும் வராது என்று , அதே நேரத்தில் பங்களாதேஷ் போன்ற இடங்களில் இருந்து வந்து  குடியுரிமை வாங்குபவரை முறை படுத்த தான் இந்த சட்டங்கள் என்று மத்திய அரசு தெளிவாக விளக்கியுள்ளாரள். எதிர்கட்சிகள் சூழ்ச்சி செய்து அரசியல் செய்து வருகின்றனர் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

Categories

Tech |