விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்களில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை உருவாக்க சில முன்னேற்றமான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். நிலவைப் பணம் ஓரளவு வசூலாகும். எதிர்ப்புகளை சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள்.
முயற்சிகளில் நல்லபலன் உண்டாகும். நீண்டநாள் எண்ணங்களும் இன்று நிறைவேறும். முக்கியமானவர்களின் சந்திப்பால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கு உறவு கைகூடும். மாணவர்களுக்கும் பிரச்சினையில்லாத நாளாக இன்றையநாள் இருக்கும். சூழலுக்கு தகுந்தார்போல் உங்களை மாற்றிக் கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.