Categories
தேசிய செய்திகள்

“ராஜஸ்தானில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்”…. 25 பேர் பரிதாப பலி… 5 பேர் காயம்..!!

ராஜஸ்தானில் இன்று பஸ் ஆற்றில் விழுந்து  விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை சுவாமி மாதோபூர் மாவட்டத்தை சேர்ந்த திருமண வீட்டாரின் குடும்பத்தினர், மாப்பிள்ளையின் நண்பர்கள் என மொத்தம் 40 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

Image result for Rajasthan: 24 people dead, 5 people injured after a bus fell into a river in Bundi today.

அப்போது பூண்டி மாவட்டம் கோட்டா லால்சோட் மெகா நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே உள்ள பாலத்தில் பஸ் ஓன்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for Rajasthan: 24 people dead, 5 people injured after a bus fell into a river in Bundi today.

இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |