Categories
சினிமா தமிழ் சினிமா

‘வடிவேலு என்னை’….. கதறி அழுத பிரபல காமெடி நடிகர் போண்டா மணி….!!!!!

ரஜினிகாந்த், விஜய் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர் தற்போது சிறுநீரக நோயால் சிரமப்பட்டு வருகிறார். 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவுக்கு உதவிக் கரம் நீட்ட திரையுலகினர் முன் வர வேண்டும் என சக நடிகரான பெஞ்சமின், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து அவரது மருத்துவ செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் அவருடன் அதிகம் சேர்ந்து நடித்த வடிவேலு தன்னை நலம் விசாரிக்க கூட வரவில்லை என்று போண்டா மணி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |