Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை சார் இது…? கால்வலிக்கு சரக்கு…. டாக்டர் செய்த சம்பவம்…!!!!

கேரள மாநிலம் குருவாயூர் சேர்ந்தவர் அணில் குமார். இவருடைய மனைவிக்கு திடீரென்று கடும் கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அணில் குமார் அவருடைய மனைவியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த டாக்டர் அவரை பரிசோதனை செய்து அனில் குமாரிடம் மருந்து சீட்டு ஒன்றை எழுதி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அனில்குமார் மெடிக்கலில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது அதில் “பாருக்கு சென்று இரண்டு பெக் மது அருந்தவும்” என்று எழுதியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனில் குமார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த விசாரணையில் அந்த மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |