தமிழக மின்வாரிய த்தில் இருந்து அழைப்பதாக மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் கள் வருகிறது. அதில் முந்தைய மாதத்திற்கான மின்கட்டணம் செலுத்திய விவரம் அப்டேட் ஆகாததால் இன்று இரவு 10:30 மணிக்குள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இதை தவிர்ப்பதற்கு உடனே அதிகாரியை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று வருகிறது. இதனை நம்பிய சிலர் அந்த எஸ்எம்எஸ்சில் உள்ள செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரிக்கு பணத்தை செலுத்தி ஏமாறுகிறார்கள். எனவே போலி எஸ்எம்எஸ் களை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மிக அதிக அளவில் பலருக்கு ஒரே நாளில் பல நேரங்களில் மின்கட்டணம் தொடர்பாக போலியான sms அனுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து பலரும் மின்வாரியத்திடம் புகார் அளித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், மின் நுகர்வோர் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் மோசடி நடைபெற்று வருகிறது. எனவே மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது குறித்து வரும் எஸ் எம் எஸ் வந்தால் அதனை புறக்கணித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உங்கள் பணம் ஜாக்கிரதை என்று குறிப்பிட்டுள்ளது.