ஜிபி முத்துவின் அப்பா பெயர் என்பதால் தான் அவர் அதை சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்கின்றார் என அவரின் மனைவி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இதில் முக்கிய போட்டியாளர் தான் ஜிபி முத்து. அவரின் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகமாக இருக்கின்றது. அவர் ஆதாமே தெரியாது என கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அவர் இருப்பதால்தான் பிக்பாஸ் என்டர்டைன்மென்டாக இருக்கின்றது என கூறி வருகின்றார்கள். ஜிபி முத்துவின் அப்பா பெயர் என்ன என அவரின் மனைவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கடப்பாரை என்று ஜிபி முத்துவின் அப்பாவை எல்லாரும் அழைப்பார்களாம். இதனால் அந்த பெயரை கேட்டதும் அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார் என அவரின் மனைவி கூறியுள்ளார்.