Categories
இந்திய சினிமா சினிமா

“காரை அதிவேகமாக ஓட்டிய டிரைவர்”…. பதறிப்போய் கத்தி கூச்சலிட்ட நடிகை…. பதர வைக்கும் சம்பவம்….!!!!!!!

காரை அதிவேகமாக ஓட்டி நடிகைக்கு மிரட்டல் விடுத்த டிரைவர்.

மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மனவா நாயக். இவர் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றார். இந்த நிலையில் இவர் செல்போன் செயலி மூலம் வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். கார் புறப்பட்ட நிலையில் டிரைவர் செல்போனில் பேசியவாறு காரை இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை கார் டிரைவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்ட வேண்டாம் என கூறியிருக்கின்றார். ஆனால் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி இயக்கி உள்ளார். இதனால் போலீஸ் விசாரித்த போது கார் டிரைவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின் நடிகை தலையிட்டு பிரச்சனையை தீர்த்தார். இதனால் டிரைவர் ஆத்திரமடைந்து 500 ரூபாய் அபராதம் நீங்கள் கொடுப்பீர்களா? கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி இருக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை டிரைவரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி கூறியிருக்கின்றார். ஆனால் காரை வேகமாக இயக்கியுள்ளார் டிரைவர். இதை தொடர்ந்து வாடகை கார் நிறுவனத்திடம் இது குறித்து உடனடியாக புகார் செய்திருக்கின்றார். இதனால் வாடகை கார் நிறுவனம் ஊழியரை தொடர்பு கொண்டு காரை வேகமாக இயக்க வேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்.

பின் நடிகை காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறியிருக்கின்றார். ஆனால் காரை நிறுத்தாமல் வேறு ஒரு நபரை செல்போனில் அழைத்து இருக்கின்றார். இதனால் பதறிப்போய் நடிகை காரில் இருந்தவாறு கத்தி கூச்சலிட்டு இருக்கின்றார். நடிகையின் குரலை கேட்ட அங்கு பைக் மற்றும் ஆட்டோவில் சென்ற சிலர் வேகமாகச் சென்று காரை மறித்து நடிகையை மீட்டார்கள். பின் நடிகை கார் டிரைவர் மற்றும் கார் எண்ணை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் மும்பை போலீசை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதை அடுத்து போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |