Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு…. முக்கிய அறிவிப்பு….!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு,7.5% உள்ள இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிடுகிறார். கலந்தாய்வு தேதிகளும் இன்று அறிவிக்கப்படும்.

Categories

Tech |