இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகின்றது.அதனைப் போலவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.தற்போது பதினாறு மாநிலங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பால் ஆதார் கார்டு சேவையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் ஆதார் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
பால் ஆதார் கார்டை பொறுத்தவரை 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் எதுவும் பதிவு செய்யப்படாது.குழந்தைகளின் புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்கப்பட்ட பெற்றோரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். பின்னர் ஐந்து வயதுக்கு மேல் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.