Categories
தேசிய செய்திகள்

தாயின் நீண்ட நாள் ஆசை….. தோளில் தூக்கி சுமந்து…. ஆசையை நிறைவேறிய தன்கமகன்கள்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 87 வயதான மூதாட்டி எலிகுட்டி பால். இவருக்கு நீண்ட நாட்களாக நீல குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இதை அறிந்த அவருடைய மகன்களான ரோஜன் மற்றும் சுந்தரம் தன்னுடைய தாயின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்து தங்களுடைய வீட்டில் இருந்து இடுக்கி மாவட்டம் கள்ளிப்பாறைக்கு ஜீப் மூலமாக சென்றுள்ளனர்.

அங்கிருந்து மேலே சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு தன்னுடைய தாயை தோளில் சுமந்து சென்றுள்ளனர். பின் அங்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தார் அந்த மூதாட்டி. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |