டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிரண்டா பெண்கள் கல்லூரியில் கடந்த 14ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பெண்கள் கல்லூரி நுழைவுவாயில் மூடப்பட்டது. ஆனால் ராம்ஜாஸ் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி சுவர் ஏறி குதித்து உள்ளேன் நுழைந்தனர். மேலும் அந்த மாணவர்கள் ஆபாச கோஷங்களை எழுப்பி முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Men climbing over the walls to get into Miranda House during an open fest. What followed was horrible. Cat-calling, groping, sexist sloganeering and more. Men entering safe spaces to harass gender minorities is nothing new, but they out do themselves every time. pic.twitter.com/UkMAuJZKVU
— Sobhana (@sobhana__) October 15, 2022