Categories
மாநில செய்திகள்

சிறுத்தை இறந்த விவகாரம்!…. ஓபிஎஸ் மகன் கைது செய்யப்படுவாரா?… பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்தார். ஏனெனில் தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இத்தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் இருக்கிறது.

தோட்ட உரிமையாளர்கள் பெயர்களை வருவாய் துறையினரிடமிருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்-க்கு சொந்தமான இடம் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு மாவட்ட வன அலுவலர் கடிதம் எழுதி அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரவீந்திரநாத் கைது செய்யப்படுவாரா? அல்லது மத்திய அரசால் காப்பாற்றப்படுவாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Categories

Tech |