குரூப் 1 தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குரூப்-1 தேர்வில் முறைகேடு புகாரை மத்திய குற்றவியல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி சேனனி உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் குறிப்பிட்ட சில பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும், அந்த பயிற்சி மையங்களை நடத்தியது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் ,
தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக அரசின் துணையுடன் வினாத்தாளை பெற்று முறைகேடு நடந்துள்ளது. இதை மாநில அரசின் கீழ் இருக்கும் அமைப்பு விசாரித்தால் விசாரணை நியாயமாக நடைபெறாது எனவே குரூப் 1 முறைகேட்டை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று அந்த மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு இனி வரும் நாட்களில் விசாரணைக்கு வர இருக்கின்றது.