சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இபிஎஸ் மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஒபிஎஸ் அமர்ந்துள்ளார். சில முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு முடிவு. முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, ராணி எலிசபெத், முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Categories