Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து….. 6 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை….. சாத்தூர் அருகே சோகம்….!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த சின்னகாமன்பட்டியில் கடந்த 19ஆம் தேதி சல்ஃபர் மற்றும் அம்மோனியம் நிறைந்து வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து ஏற்பட அந்த அறை முழுவதும் தரை மட்டமானது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,

நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள், விஜயகுமார், முத்துலட்சுமி உள்ளிட்ட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட மருத்துவமனைக்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |