ஐ ஆர் இ ஓ மனை வணிக நிறுவனத்தின் துணைத் தலைவர் லலித் கோயில் மேலாண் இயக்குனர் போன்றோருக்கு எதிராக தில்லி, குரு கிராமம், பஞ்ச்குலா போன்ற 30 இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் மனை வணிக நிறுவனத்தினர் மீது கருப்பு பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைகள், வணிக வளங்கள், குடியிருப்புகளை விற்பதாக தெரிவித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மோசடியினால் பெறப்பட்ட நிதி பத்திரங்கள் கடன் வழங்குதல் நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரிகளுக்கு சலுகைகளாக வழங்குதல் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக அமலாக்கத் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த சூழலில் நிலங்களில் காலி மனைகள் வணிக வளாகங்கள் குடியிருப்பு மனைகள் மற்றும் வங்கி கணக்குகள் போன்ற 1,300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சனிக்கிழமை கூறியுள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு 1,317.30 கோடியாகும் மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நிறுவனத்தின் துணைத் தலைவர் லலித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்ச்குலாவில் உள்ள கருப்பு பணம் மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் கோயில் மீதான குற்றப்பத்திரிகை அமலாக்க துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.