இந்தியாவின் 75 ஆவது வருட சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளை 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என 2022 – 2023 ஆம் நிதி அ மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி நாட்டின் மூளை முடுக்கெல்லாம் டிஜிட்டல் வங்கி அனுபவம் சென்று சேர்வதற்கு வசதியாக பல்வேறு மாவட்டங்களில் இந்த வங்கி கிளைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் 11 பொதுத்துறை வங்கிகள் 12 தனியார் வங்கிகள் போன்ற நிறுவனங்கள் இணைந்து இருக்கின்றது.
ஆன்லைன் மையம் போல இயங்கும் இந்த டிஜிட்டல் வங்கி கிளைகள் சேமிப்பு கணக்கு தொடர்வது கணக்கு இருப்பு, சரிபார்ப்பு, பாஸ்புக் அச்சிடுதல், நிதி பரிமாற்றம், நிலையான வைப்பு முதலீடுகள், கடன் விண்ணப்பங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கான விண்ணப்பம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வசதிகளை வழங்குகிறது. இந்த 75 வங்கிகளை பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலமாக நாட்டிற்கு அர்பணித்துள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசி அவர் 2014 ஆம் வருடம் முந்தைய போன் புக்கிங் முறையை டிஜிட்டல் பேக்கிங் முறைக்கு மாற்றிய பா ஜனதா அரசின் முயற்சியால் நாடு நீடித்த வளர்ச்சி பாதையில் செல்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் பேசிய போது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆனது அதன் வங்கி அமைப்புடன் நேரடி தொடர்புடையது வங்கித் துறை நல்ல நிர்வாகம் மற்றும் சிறந்த சேவை வழங்குவதற்கான ஒரு ஊடகமாக மாறி இருக்கிறது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பணியாளர்களுக்கான நேரடி பண பரிமாற்ற முறையால் முறைகேடுகள் ஒழிந்து வெளிப்படை தன்மை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் பயனாளிகளுக்கு நேரடி பண பரிமாற்றம் முறையில் இதுவரை 25 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு விடுவித்து இருக்கிறது இதனை அடுத்து விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தில் மேலும் ஒரு தவணை நிதி நாளை (இன்று) விடுவிக்கப்படும் டிஜிட்டல் வங்கிகளை பொறுத்தவரையில் இவை மேலும் நிதி சேர்க்கை மற்றும் குடிமக்களுக்கு வங்கி அனுபவத்தை மேம்படுத்துகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அமலில் இருந்த போன் பேக்கிங் முறையில் எந்தெந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனை கீழ் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்பது பற்றிய வங்கிகளுக்கு தொலைபேசியில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.