Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற விமான நிலைய ஊழியர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தனியார் விமான நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். இவர் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை-காந்தி சாலை சந்திப்பு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஏழுமலை அரசு விரைவு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஏழுமலையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |