நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகளை பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 75 ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது, நாட்டில் அனைவருக்குமான நிதிச் சேவைகளை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார். மேலும் ஏழை மக்கள் நாட்டின் கடை கோடி மனிதனின் வீடுக்கே வங்கி சேவைகளில் கொண்டு செல்ல உதவும். அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் உள்கட்டமைப்பை எளிமைப்படுத்தி சாதாரண மக்களுக்கான வசதிகளை மேம்படுத்த டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுக்கள் உதவும்.
பேப்பர் இல்லாமல் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் எளிதாக வங்கி சேவைகளை பெறவும் டிஜிட்டல் வங்கி சேவை பாதுகாப்பை அதிகரிக்க உதவுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கரூர், புதுச்சேரி, உத்தரகண்டில் டேராடூன், நாகாலாந்து, ஜார்கண்ட் உள்ளீட்டு 75 இடங்களில் டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது, வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கிட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, UPI QR code, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு திட்டங்களின் மூலம் கடன்கள், பணம் போடுவது, பணம் எடுப்பது, பாஸ்புக் பிரிண்டிங், பண பரிமாற்றம், அடல் பென்ஷன் யோஜனா, இன்சூரன்ஸ், குறைகளை தெரிவிப்பது, செக் புக் பெற கோரிக்கை விடுப்பது என பல்வேறு சேவைகளை டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகள் மூலம் பெறலாம்.